அதிரை புதுத்தெருவைச் சேர்ந்தவர் ராவுத்தர். இவர் நேற்று (09/02/2024 - வெள்ளிக் கிழமை) மாலை 5:00 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்தபோது மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த நபர் இவர் மீது மோதியதில் இவருக்கு கால் உட்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது.
படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமான கிழத்தோட்டம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு உள்ளார். அதிரையில் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது மக்களை கவலையடைய செய்துள்ளது.