திருச்சி கோட்டத்தில் பயணிகள் இரயிலுக்கு இன்று முதல் சாதாரண கட்டணம் வசூலிக்கப்படுவதால் அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை உள்ளிட்ட பிற ஊர்களுக்கு மயிலாடுதுறை - திருவாரூர் பயணிகள் ரயில் மூலமாக செல்லும் கட்டணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.
பத்திரிக்கை செய்தி கொரானா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன
கொரோனா தொற்றுக்காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்பு கட்டணமாக உயர்த்தப்பட்ட து
கொரானா தொற்று முடிந்து சகஜ நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவில்லை
பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.
இக் கோரிக்கையினை ஏற்று தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் இன்று முதல் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணத்தை முன்பு இருந்த நிலைக்கு குறைத்துள்ளது.
ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய கட்டணத்தில் பயண சீட்டு வழங்கப்படுகின்றன
இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி இரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் வர்த்தகர்கள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது
மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி பயணிகள் ரயிலில் மயிலாடுதுறையிலிருந்து காரைக்குடிக்கு வெறும் 45 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு வெறும் 10 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதிரையில் இருந்து முத்துப்பேட்டை செல்வதற்கான கட்டணமும் பத்து ரூபாயாக குறைந்துள்ளது.
அதிரையில் இருந்து பேராவூரணி செல்வதற்கான கட்டணமும் பத்து ரூபாயாக குறைந்துள்ளது.
அதிரையில் இருந்து அறந்தாங்கி செல்வதற்கான கட்டணமும் 20 ரூபாயாக குறைந்துள்ளது.
அதிரையில் இருந்து திருவாரூர் செல்வதற்கான கட்டணமும் 20 ரூபாயாக குறைந்துள்ளது.
அதிரையில் இருந்து மயிலாடுதுறை செல்வதற்கான கட்டணமும் 25 ரூபாயாக குறைந்துள்ளது.
அதிரையில் இருந்து காரைக்குடி செல்வதற்கான கட்டணமும் 25 ரூபாயாக குறைந்துள்ளது.