அதிரையில் தொடர்ந்து நடந்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் காவல் ஆய்வாளர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 9 மணியளவில் காவல் நிலையம் அருகிலேயே விபத்து நடந்துள்ளது. காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த மூதாட்டி மீது அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞர் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.