அதிரையில் சாலை விபத்துகளால் தொடரும் மரணங்கள்.. காவல் நிலையத்தில் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மனு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினத்தில் தொடரும் சாலை விபத்துகள் உயிர்பலியை தவிர்க்க பேரிக்கேட் அமைத்து நடவடிக்கை எடுக்க கோரி சங்கம் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, "அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொடர் சாலை விபத்துகள். குறிப்பாக ECR சாலையில் வாகனங்களில் அதிவேகமாக செல்வதனால் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுகிறது. இரு தினங்களுக்கு முன் விபத்தில் சிக்கியவர் நேற்று மரணமடைந்தார் அதனை தொடர்ந்து,

இன்று 11.02.2024 சேதுரோட்டில் விபத்து நடந்தது. விபத்தில் பாதிக்கப்பட்ட அஜ்மல் என்பவர் மரணமடைந்தார். விபத்தை ஏற்படுத்தியவர்களை விரைந்து கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு.

இனி விபத்துகளை தவிர்க்க ECR பிஸ்மி மெடிக்கல் சந்திப்பு, பட்டுக்கோட்டை சாலை சேரமன்வாடி சந்திப்பு, வண்டிப்பேட்டை சந்திப்பு முக்கிய பகுதிகளில் பேரிகேட் அமைப்பதனால் இது மாதிரியான விபத்துகளை தவிர்க்க உதவும். எங்களது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்." என்று குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...