அதிரை கடற்கரைத் தெரு வாழைக் குளம் தூர்வாரும் பணி தொடக்கம்.. கைஃபாவுடன் கைகோர்த்த தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றம்

Editorial
0
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வாழைக்குளம் கோரை புற்கள் படர்ந்து காணப்பட்டது. இந்த குளத்தை தூர்வார கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் முயற்சி எடுக்கப்பட்டது. 2024ம் ஆண்டுக்கான திட்டத்தின் ஒன்றான வாழைக்குளம் தூர்வாரும் பணி கைஃபா அமைப்பின் உதவியோடு இன்று காலை தொடங்கியது. 
கைஃபா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி, செயலாளர் பிரபாகரன், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள், தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர், அதிரை லயன்ஸ் சங்க தலைவர், செயலாளர், தெருவாசிகள் அப்போது உடனிருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...