அதிமுக நகர அதிமுக துணை செயலாளர் முஹம்மது தமீம் அவர்கள் இன்று தட்டாரத் தெரு இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நாளை வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிரை கூட்டுறவு வங்கி துணைத் தலைவராகவும் இருந்த தமீம் அவர்கள், அதிரை AFFA கால்பந்து அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அரசியல் கடந்து பல்வேறு சமுக பணிகளை மேற்கொண்டு வந்த தமீம் அவர்களின் மரணம் பலரை சோகமடைய செய்துள்ளது.
இந்த நிலையில் தமீம் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிரை நகர அதிமுக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் இரங்கல் தெரிவித்து போஸ்டர் வைத்துள்ளனர்.