இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். மேற்கண்ட தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிராம்பட்டினத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயுன் கபீர் ஷிர்கான சில வார்த்தைகளை பேசியதாகவும் இதனால் அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் அதிரை நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஹுமாயுன் பேசியவுடன் அதிரை நிர்வாகிகள் சீமானிடமே இது தொடர்பாக நேரில்முறையிட்டு தங்களின் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் நம்மிடம் தெரிவிக்கையில், "ஹுமாயுன் கபீர் தன்னுடைய அறிமுக உரையில்
ஷிர்க்கான சில வார்த்தைகளை தெரிவித்தார். இது தொடர்பாக நேரடியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கட்சியின் அதிரையை சேர்ந்த நிர்வாகிகள் முறையிட்டனர். இதனை அடுத்து சீமான் ஹுமாயூன் கபீரை நேரடியாக அழைத்து கண்டனம் தெரிவித்தார்." என்றார்.