
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு ஊரில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை (29/02/2024) முதல் 7 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இந்தப் பணிகள் இன்று காலை 10 மணியளவில் கடற்கரை சாலை, ரயில்வே கேட் அருகில் தொடங்கப்பட்டது. இந்த துவக்க விழாவில் அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.