தக்வா பள்ளி மையவாடி இடம் அருகே பொது இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ தொழிலாளர் சங்கத்துக்கு அப்பகுதி மக்கள் ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல ஆண்டுகள் பழமையான மனிதநேய ஆட்டோ சங்கத்தை பிரித்து அதே பகுதியில் தனியாக சங்கம் அமைப்பதை கண்டித்து மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஜாவியால் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் AITUC ஆட்டோ தொழிலாளர் சங்க கூடாரத்தை அகற்ற உத்தரவிட்டனர். அதன் தொடர்ச்சியாக கூடாரம் அகற்றப்பட்டது.