அதிரை ரயில் பாதையில் வெற்றிகரமாக நடைபெற்ற அதிவேக சோதனை ஓட்டம் (வீடியோ இணைப்பு)

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை வழியாக திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில் இன்று பகல் 1.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் ஓ.எம்.எஸ்  அதிவேக சோதனை ஓட்டம் (121 கிமீ) வெற்றிகரமாக நடைபெற்றது.

இன்று திருத்துறைப்பூண்டி காரைக்குடி இடையே பட்டுக்கோட்டை வழியாக அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டியில் 4.37 கிளம்பி காரைக்குடிக்கு 5.47க்கு ரயில் சென்றடைந்தது. 120 கிலோமீட்டர் தூரத்தை 1.10 மணி நேரத்தில் கடந்தது. 

சில குறிப்பிட்ட இடங்களில் அதிகபட்சமாக 121 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ரயில் இயக்கப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே கேட்டுக்களிலும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 

திருச்சி கோட்ட பொறியாளர் (கிழக்கு) ரவிக்குமார், பொறியாளர், பழனிவேல், 
டிராபிக் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் ஆகியோர் கண்காணிப்பில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...