சீல் அகற்றப்பட்டாலும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பள்ளி திறக்கப்படாமல் இருந்தது. மூன்று நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மாநில அளவில் இமாம் ஷாபி பழைய பள்ளி நில மீட்பு போராட்டத்தை நடத்துவதற்கு போராட்டக் குழுவினர் தயாராகி வருகிறார்கள்.
மாநில அளவில் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து வீரியமான போராட்டத்தை தொடர இருப்பதாக போராட்டக் குழுவினர் நம்மிடம் தெரிவித்தனர். மீண்டும் போராட்டம் ஏன் என கேட்டபோது மாவட்ட ஆட்சியர் இமாம் ஷாபி பழைய பள்ளி இட விவகாரம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு தாமதம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.