
அதிராம்பட்டினம் கடற்கரையும் அதற்கு செல்லக்கூடிய பாதையும் தற்போது புதர்கள் நிரம்பி பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இவ்வாறு உள்ள நமது அதிராம்பட்டினம் கடற்கரையை தூய்மைப்படுத்தி சுத்தமாகவும், தூய்மையாகவும் மாற்றி தரமான கடற்கரையாக, பொதுமக்களின் பொழுதுபோக்குக்கு ஏற்ற இடமாகவும் மாற்றுவதற்கு ஊரில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.
இது தொடர்பாக நாளை வியாழக்கிழமை (29/02/2024) முதல் 7 நாட்களுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணியளவில் கடற்கரை சாலை, ரயில்வே கேட் அருகில் நடைபெறும் துவக்க விழாவில் அதிரையைச் சேர்ந்த அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், கிராம பஞ்சாயத்தார்களும், அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.