Ads: Crescent builders - Coming Soon
அதிரை சேர்மன்வாடி வண்டிப்பேட்டை இடையேயான சாலையில் பைக் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து நிலையம் நோக்கிய பாதையில் சென்று கொண்டிருந்த காரை பின்னால் வந்த பைக் முந்தி செல்ல முயன்ற போது மோதியதில் விபத்து ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரிக்கையில் குடிபோதையில் பைக் ஒட்டி வந்த இளைஞர் கார் மீது மோதியதில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.