தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக் கல்லூரியில் ரஹ்மானியா ஆலிம் பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்,மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் பி.ஏ. ஹாஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் சிறப்பு சொற்பொழிவு நடத்தினார்
அப்போது அவர் கூறியதாவது, "அதிராம்பட்டினம் மக்கள் உயர்வானவர்கள். அவர்கள் அதிகமான மார்க்க பற்று உள்ளவர்கள். இவர்களுடன் நான் ஹஜ் பயனத்தின் போது பயணம் செய்து உள்ளேன். இவர்களின் இந்த உழைப்பு கியாமத் நாள்வரை நின்று நிலவ துவாச் செய்கின்றேன். இந்த புனிதமிக்க இந்த ரஹ்மானிய்யா மதரஸா கியாமத் நாள்வரை பல உலமாக்களை உருவாக்க அல்லாஹ் உதவி செய்வானாக.
உலகத்தில் பெருமை இபாதத்தில் கூட வரக்கூடாது எதைக்கொண்டும் வாழ்க்கையில் பெருமை வரக்கூடாது. ரப்பு தந்தது அவ்வளவு தான் கல்வி கற்று விட்டேன் என்று பெருமை கொண்டவர்கள் அவர்களது அழிவுக்கு காரனமாக அமைகின்றது. எந்த காரணம் கொண்டும் ஒருமனிதனுக்கு பெருமை வரவேகூடாது." என்றார்.