அதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா (17/2/2024) இன்று கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது. விழாவிற்கு மௌலானா, மௌலவி ஆஷிகுர்ரஸுல் (ஸல்) ஷெய்குல் ஜாமிஆ, அல் மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் கே.டி. முஹம்மது குட்டி பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் தலைமை வகித்து மாணவர்களுக்கு ஸனது வழங்கி பேருரையாற்றினார்கள்.
அல் மத்ரஸத்துர் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதிரை மஸ்ஜிதுல் அக்சா பள்ளியின் இமாம் மௌலானா, மௌலவி அல்ஹாபிழ் பி.முஹம்மது அப்துல் காதிர் ஆலிம் காஷிஃபி ஹழ்ரத் கிராஅத் ஒதினார்கள். அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் மௌலானா, மௌலவி ஏ.முஹம்மது நெய்னா ஹழ்ரத் ஆலிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்,மேலப்பாளையம் உஸ்மானிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் பி.ஏ.ஹாஜா முயீனுத்தீன் பாகவி ஹழ்ரத் சிறப்பு சொற்பொழிவு நடத்தினார்கள். மதரசாவில் ஸனது பெற்ற மாணவர்கள் நன்றியுடன், திக்ரு மஜ்லிஸ் நடத்தப்பட்டு ஈருலக வெற்றிக்காக துஆ, பிரார்த்தனை செய்யப்பட்டது.
தகவல் மற்றும் படங்கள்: சாகுல் ஹமீது, மணிச்சுடர் நிருபர்