அதிரை ரயில் பாதை "பாஸ்" ஆகிருச்சு.. இனி ரயில் பயண நேரம் குறைய வாய்ப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி ரயில் தடத்தில் வெற்றிகரமாக முடிந்த அதிவேக ஒ.எம்.எஸ்சோதனை ஓட்டம் காரணமாக அதிரை ரயில் பாதை வழியாக செல்லும் ரயில்களின் பயண நேரம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் தடத்தில் (149.5 கிலோமீட்டர்) தற்போது பயணிகள் மற்றும் விரைவு ரயில் 75 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகத்தை 110 கிலோமீட்டர் அளவுக்கு அதிகப்படுத்தி இயக்குவதற்காக ரயில்வே நிர்வாகம் ஓ.எம்.எஸ் அதிவேக சோதனை ஓட்டத்தை நேற்று நடத்தியது 

திருத்துறைப்பூண்டியில் மாலை 04. 40 மணிக்கு இந்த அதிவேக சோதனை ரயில் புறப்பட்டு தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி வழியாக மணிக்கு 121  கிலோமீட்டர் வேகத்தில் 122 கிலோமீட்டர் பயணம் செய்து காரைக்குடியை மாலை 5 40 மணிக்கு அடைந்தது. இதன் மூலம் இந்த தடத்தில் வருங்காலத்தில் விரைவு ரயில்கள் 110 கிலோ மீட்டர் வேகத்திற்கு இயக்கப்படும் என தெரிகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...