அதிரை மக்களுக்கு குட் நியூஸ்.. பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு

Editorial
0
ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை அமைக்கப்பட்ட வேண்டும் என்ற 92 ஆண்டு காலகோரிக்கை நிறைவேறாத கோரிக்கையாக இருந்து வந்தது. ஒவ்வொரு ஆண்டும்  மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் புதிய ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரியலூர் தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அலுவலர்கள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள். அதிரை மக்களும் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்  மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் வகையில் மன்னார்குடி - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.161 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது வந்தால் அதிரையில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடியாக ரயிலில் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...