அதிரையில் ஜாவியால் சாலையில் பரபரப்பு.. வெடித்த ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! என்ன காரணம்?

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை தக்வா பள்ளி அருகே ஜாவியால் சாலையை ஒட்டி பல ஆண்டுகளாக மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே ஜாவியால் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் அமைப்பாளர் ஏஐடியுசி சார்பில் தனியாக ஆட்டோ தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டு அதன் கிளை தலைவராக முஹம்மது இக்பால் நியமிக்கப்பட்டார்.
தக்வா பள்ளி மையவாடி இடம் அருகே பொது இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆட்டோ தொழிலாளர் சங்கத்துக்கு அப்பகுதி மக்கள் ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல ஆண்டுகள் பழமையான மனிதநேய ஆட்டோ சங்கத்தை பிரித்து அதே பகுதியில் தனியாக சங்கம் அமைப்பதை கண்டித்து மனிதநேய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஜாவியால் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...