Ads: Crescent builders - Coming Soon
அதிரை புதிய நகராட்சி கட்டிடம் அமைக்க மெயின் ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாளை நகராட்சி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
இது குறித்து அதிரை நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய அழைப்பிதழில், "எதிர்வரும் 22.02.2024 வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அதிராம்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் புதிய நகராட்சி கட்டிடம் ரூ 3 கோடியே 50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நகர் மன்ற தலைவர் M.M.S. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் அவர்களின் தலைமையிலும் நகர்மன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. தாங்களும் தாங்கள் நிர்வாகத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.