அதிரையின் 300 ஆண்டுகளுக்கு முந்தைய பெயர் இதான்.. அதிரை பிறை ஆய்வில் கிடைத்த மேப்

Editorial
0


Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினத்தின் பெயரில் எப்போதுமே குழப்பம் நீடித்து வருகிறது. எந்த வரலாற்று பின்னணியும் இன்றி ஒரு மன்னரின் பெயருடன் இணைத்து "அதிவிரராமபட்டினம்" என்று ஊர் பெயரை தெரிவித்து ஒரு தரப்பினர் குழப்பம் விளைவித்து வருகின்றனர். கேட்டால் அதிவிரராம பாண்டிய மன்னன் அதிரையில் ஆட்சி செய்ததாக சொல்வார்கள். இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளர்களிடம் விசாரித்தபோது அந்த மன்னர் டெல்டா பக்கமே வந்தது இல்லையாம்.

அதிரை தொடர்பான சில அரசு துறை, தனியார் நிறுவன தளங்கள், வங்கிகளில் அதிராமபட்டினம் என குறிப்பிட தொடங்கி இருக்கிறார்கள். இதுவும் உள்நோக்கத்துடன் மாற்றப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சரி, அப்படி என்றால் அதிரையின் பழைய பெயர் என்ன என்று நாம் விசாரித்தபோது செல்லிநகர் என்ற பெயரை பலர் கூறினார்கள். அதிரை அருகே செல்லிக்குறிச்சி ஏரி அமைந்துள்ளதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
சரி பழங்கால வரைபடங்களில் (MAP) அதிரையின் பெயர் எப்படி உள்ளது என அவற்றை திரட்டும் முயற்சியில் அதிரை பிறை சில நாட்களாக ஈடுபட்டது. அதில் 1724 ஆம் ஆண்டு டச்சு (நெதர்லாந்து) அமைச்சரும் எழுத்தாளருமான பிராங்காயிஸ் வெலட்ஜின் வெளியிட்ட தென் இந்தியாவின் மேப் கிடைத்தது.

அதில் அதிரையின் பெயர் ADRIAM PADAM (அத்ரியம்படம்) என குறிப்பிடப்பட்டு உள்ளது. பட்டினம் என்று முடியக்கூடிய கடலோர நகரங்களின் பெயர்கள் இதில் படம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
 1759 ஆம் ஆண்டு கோரமண்டல் கடலோர பகுதிக்கான வரைபடத்தில் அதிரையின் பெயர் ADARIAM PATNAM (அதரியம் பட்னம்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலும் மேலே உள்ள வரைபடம் போல் பட்டினத்தை படம் என குறிப்பிட்டுள்ளனர். 

நாம் மேற்கொண்ட ஆய்வில் நமது ஊருக்கு அதிவீரராம பட்டினம் என்ற பெயர் இருந்ததாக எந்த ஒரு தரவுகளும் கிடைக்கவில்லை. நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பதிவுகளில் அதிராம்பட்டினம் என்ற பெயர் கூட இல்லை. தொடர்ந்து அதிரையின் உண்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் முயற்சியில் அதிரை பிறை ஈடுபட்டு வருகிறது. உங்களுக்கு அதிரையின் உண்மையான வரலாற்று நிகழ்வுகள், துணுக்குகள் கிடைத்தால் அதிரை பிறைக்கு கீழே உள்ள கமெண்ட் பகுதி  மூலம் தெரிவிக்கலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...