அதிரை MKN அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ஸலாஹிய்யா மதர்சாவின் 125 வது ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் P.M.முஹம்மது அலி பாகவி ஹழ்ரத் அவர்கள் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பெருரை நிகழ்த்தினார்கள்.
ஸலாஹிய்யா மதர்சா பேராசிரியர் M.S.முஹம்மது மீரான் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள், ஸலாஹிய்யா மதர்சா பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ். M.G.ஸஃபியுல்லாஹ் அன்வாரி ஹழ்ரத், சென்னை ஆவடி முபாரக் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் M.முஹம்மது அப்துல் காதிர் ஸலாஹி ஹழ்ரத் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.