Ads: Crescent builders - Coming Soon

ஆனால், டெண்டர் கோரப்படாமல் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையை சந்தித்து அதிராம்பட்டினம் மக்கள் மனு வழங்கினர். இதனை தொடர்ந்து முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிராம்பட்டினத்தில் 110kv துணை மின் நிலையம் அமைப்பதற்கு டெண்டர்கோரும் பணிகளை தொடங்க எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக 110 kV மின் நிலையம் அமைக்கப்பட்டு 3 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிரை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட 110 kV மின் நிலையம் உட்பட பல்வேறு மின் திட்ட பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.