அதிரையில் தொடர்ந்து நடந்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது இதில் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு கொடுக்க கூடாது. கொடுக்கும்பட்சத்தில் வாகனம் கொடுப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
2. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெற்றோர்கள் கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
3. கண்டிப்பாக தலை கவசம் அணிய வேண்டும்.
4. இருசக்ககர, முன்று சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் வாகன ஆவண நகல்களை கண்டிப்பாக வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.
5. குடிபோதையில் வாகனம் ஓட்ட கூடாது.
6. அனைத்து மோட்டார் வாகன சட்டங்களையும் வாகன ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டும்.
7. கனரக வாகன ஒட்டிகள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிய வேண்டும்.
8. போக்குவரத்து சட்ட விதிகளை மீறுவோர்கள் மீது காவல் துறை எடுக்கும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
9. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தல் கூடாது. நிறுத்தும்பட்சத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். (குறிப்பாக ECR. Road).
10. செல்போன் பேசி கொண்டு வாகனம் ஒட்டுவதை தடுக்க வேண்டும்.
11. இவ்வாறு மேற்கண்ட விதிகளை கடைப்பிடிக்கும் பட்சத்தில் வாகன விபத்துகளையும், வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிர் சேதத்தையும் தடுக்கலாம்.