இரத்ததான முகாம் மற்றும் இரத்த கொடையாளர்கள் சேகரிப்பு முகாம் நடைபெற்றது. TNTJ அதிராம்பட்டினம் கிளைகள் மற்றும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி (TMCH) இணைந்து நடத்தும் இந்த முகாம் இன்று காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை TNTJ பள்ளிவாசலில் நடைபெற்றது.
இதில் இலவசமாக ஹிப்பிமோகுலோபின், இரத்த வகை அறிந்து கொள்ளும் வசதி செய்யப்பட்டது. பெண்களுக்கு இரத்த தானம் செய்ய தனி இட வசதி உள்ளது மற்றும் இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டது. இதில் அதிரை நகராட்சி துணை தலைவர் ராம குணசேகரன், நகராட்சி தலைவரின் கணவர் MMS அப்துல் கரீம் கலந்துகொண்டனர்.