அதிரையில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு திமுக கவுன்சிலரின் கணவர் ஆதரவா? அதிரை பிறை மீதும் அவதூறு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளியின் நிலம் மீட்பு போராட்டம் 11 நாட்களுக்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு கடந்த 21ம் தேதி இரவு அதிகாரிகள் பள்ளியின் சீலையும் பூட்டையும் அகற்றினர். அருகில் வைக்கப்பட்டிருந்த நகராட்சியின் பேனர்களும் கிழிக்கப்பட்டன. இரவு பகல் பாராமல் அதிராம்பட்டினம் பெண்கள், ஆண்கள், முதியோர்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் நடத்திய போராட்டம் மற்றும் பள்ளி நிர்வாகம், வழக்கறிஞர்கள், போராட்டக் குழுவினர்  மேற்கொண்ட சட்ட மற்றும் அரசியல் ரீதியிலான நகர்வுகள் காரணமாக இந்த வெற்றி கிடைத்தது.

இந்த நிலையில் சீல் அகற்றப்பட்டதை கண்டித்து நகராட்சிக்கு ஆதரவாக நேற்று இந்து முன்னணி போராட்டம் நடத்த திட்டமிட்டது. "நகராட்சிக்கு சொந்தமான வானொலி பூங்காவை தனியார் பள்ளி நிர்வாகத்திடம் இருந்து மீட்டு தராத மற்றும் உயர்நீதி மன்ற தீர்ப்பை மதிக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் இந்து முன்னணி நடத்த விருந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இந்து முன்னணியை சேர்ந்த சுமார் 3 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 30 காவல்துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக அதிரை பிறையில் முகநூலில் வெளியிட்ட  செய்திக்கு கீழே திமுக 3வது வார்டு கவுன்சிலர் கிருத்திகாவின் கணவர் ராஜா கமெண்ட் செய்திருந்தார். "உங்கள் பத்திரிக்கை மத வெறியையும் மதப் பிரச்சாரத்தையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிறது. நாங்களும் இந்து தான் எனது கட்சி, எங்களது தலைமை போராட்டத்தில் கலந்து கொள்ள  எங்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை. நேற்று போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே கைது நடவடிக்கையை நடந்தது.

போலீஸ்  கைது நடவடிக்கை எடுப்பதால் பலரும் கலந்து கொள்ளாமலே சென்று விட்டார்கள். யாரையும் எளிதாக எடை போட்டு விடாதீர்கள். உங்களை மாதிரி பணம் கொடுத்து அனைவரையும் அழைத்து போராடும் பணபலம் அவர்களிடத்தில் இல்லை." என இந்து முன்னணி போராட்டதுக்கு ஆதரவாகவும், அதிரை பிறை மீது அவதூறு பரப்பி இருக்கிறார். ஆனால் அதிலே பிறை இதுவரை எந்த ஒரு மதத்தை விமர்சித்தோ எதிர்த்தோ பதிவுகளை வெளியிட்டது கிடையாது சொல்லப்போனால் நேற்று ஒரு பதிவில் மத நல்லிணக்கத்தை காத்த இந்துக்கள் என்ற தலைப்பில் பதிவை வெளியிட்டோம்.
நிலைமை இப்படி இருக்க திமுக அரசின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து இந்து முன்னணி நடத்த விருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக திமுக கவுன்சிலரின் கணவரே கருத்திட்டு இருப்பது குழப்பமடைய செய்துள்ளது. பொதுவாக இந்து முன்னணி பாஜக போன்ற கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கூட்டம் குறைவாக இருந்தால் திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் அதிராம்பட்டினம் திமுக ராஜாவோ இந்து முன்னணிக்கு வக்காலத்து வாங்குகிறார்.

இதற்கு முன் ARDA நில விவகாரம் அதிரை எக்ஸ்பிரஸ் இன் பத்திரிக்கையாளர்  சாலிஹை இதே ராஜா தாக்க பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...