இது குறித்து அரசு வெளியிட்ட அமைதிப் பேச்சு வார்த்தைக் கூட்ட நடவடிக்கைகள், "தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கிராமத்தில் அரசுப் புறம்போக்கு வகைப்பாடுடைய புல எண்.313/2 இல் 0.210 ஹெக். பரப்புடைய நகராட்சிக்குச் சொந்தமான ஹசன் வானொலிப் பூங்கா அமைந்திருந்த இடத்தில் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகமானது குத்தகை அடிப்படையில் கட்டிடங்கள் கட்டி அனுபவம் செய்து வருவதை தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண் W.A. 362/2021. 21.11.2023 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 11012024 அன்று மேற்படி இடத்தின் நுழைவாயில் பகுதியில் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினர் பூட்டி அரக்கு முத்திரையிட்டதைத் தொடர்ந்து அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை சார்பாக தொடர் போராட்டம் நடைபெறுவதை முன்னிட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்திடுவதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 20.012024 அன்று மாலை 07.00 மணியளவில் அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பெற்றது.
இக்கூட்டத்தில் கீழ்க்காணும் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினர் கலந்துக் கொண்டனர்.
1. மாவட்ட வருவாய் அலுவலர் தஞ்சாவூர்
2. கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,தஞ்சாவூர்
3. வருவாய் கோட்டாட்சியர் (பொ), பட்டுக்கோட்டை
4. வட்டாட்சியர் (பொ). பட்டுக்கோட்டை
5. உதவித் திட்ட அலுவலர், மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநரகம், தஞ்சாவூர்
6. அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை சார்பாக (i) திரு. K. அஷ்ரப் அலி, (ii) திரு. A.M. சிராஜீதின், (iii) திரு. A.H. ஹாஜா சரீப், (iv) திரு. Z. முகம்மது தம்பி. (v) திரு.முகம்மது யூசுப்
அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத் தரப்பின் வாதம்:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் கிராமத்தில் அரசுப் புறம்போக்கு வகைப்பாடுடைய புல எண்.313/2 ல் 0.210 ஹெக். பரப்புடையதும் தற்போது அதிராம்பட்டினம் நகராட்சிக்ச் சொந்தமானதுமான இடத்தில் கடந்த 1946. ஆம் ஆண்டு முதல் ஹசன் வானொலி பூங்கா அமைந்திருந்ததாகவும் அவ்விடத்தினை அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளைக்கு அந்நாளைய அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் ஆண்டொன்றுக்கு ரூ.300/- தொகை செலுத்தி மூன்றாண்டுக்கு குத்தகைக்கு எடுத்ததாகவும் கடந்த 1978-ஆம் ஆண்டு குத்தகைக் காலம் முடிவுற்றும் அறக்கட்டளை நிர்வாகத்தினர் மேற்படி இடத்தினை காலி செய்யாமல் அவர்களது பயன்பாட்டில் வைத்திருந்ததால் பட்டுக்கோட்டை முன்சிப் நீதிமன்றத்தில் O.S எண்.667/1982 என்ற விவரப்படியும் பட்டுக்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு O.S எண்.146/2010 என்ற விவரப்படியும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது மேல்முறையீட்டு மனு வழக்காக SA (MD) No. 559/2019 என்ற விவரப்படியும், தீர்ப்புகளின் அடிப்படையில் அதிராம்பட்டினம் பேரூராட்சியிடம் மேற்படி இடத்தை ஒப்படைக்குமாறு அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் இந்நிலையில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண் W.A. 362/2021ல் நாள் 21112023 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 11.01.2024 அன்று மேற்படி இடத்தில் உள்ள கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியினை அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினர் பூட்டி அரக்கு முத்திரையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை தரப்பின் வாதம்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண் W.A. 362/2021.இல், 21,112023 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 11012024 அன்று மேற்படி இடத்தில் உள்ள கட்டிடத்தின் நுழைவாயில் பகுதியினை அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினர் பூட்டி அரக்கு முத்திரையிட்டதில் முறையான சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின் சார்பாக நிறுவப்பட்டிருந்த பெயர் பலகையினை சட்ட விதிமுறைக்குப் புறம்பாக JCB வாகனம் மூலம் தகர்த்தெறிந்ததாகவும், உரிய சட்டப்பிரிவின் கீழ் தங்களுக்கு கையகப்படுத்துவது குறித்த அறிவிப்பு அனுப்பப்படவில்லை எனவும் மேற்படி இடத்தினை கல்வி அறக்கட்டளை சார்பாக வாங்குவது தொடர்பாக ஏற்கனவே முடிவு எட்டப்பட்டு இது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும் கடந்த 2020-ஆம் ஆண்டு வரை அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குத்தகை நிலுவைத் தொகையை செலுத்திவிட்டதாகவும் 2021 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பேரூராட்சியானது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு, அவர்கள் குத்தகை தொகையை பெறுவதற்கு முன்வரவில்லை எனவும் தற்போது இப்பொருள் தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அது விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவசரக்கதியில் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினர் மேற்படி நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தற்போது உடனடியாக பட்டுக்கோட்டை வட்டம். அதிராம்பட்டினம் கிராமத்தில் அரசுப் புறம்போக்கு வகைப்பாடுடைய புல எண்.313/2-ல் 0.210 ஹெக் பரப்புடைய இடத்தில் இருக்கும் கட்டிடத்தின் முன்பு அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினர் சார்பாக பூட்டி சீலிடப்பட்டதை அகற்றித் தரவேண்டுமெனவும் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை சார்பாக பணிகள் மேற்கொள்ள அனுமதி தர வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைதிப்பேச்சு வார்த்தைக் கூட்டத்தில் எட்டப்பட்டத் தீர்வுகள்
1. பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையானது குத்தகை அடிப்படையில் நீண்ட காலமாக அவ்விடத்தினை பயன்படுத்தி வருவதாலும்,
2. அப்பகுதியின் ஒரு பகுதி மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும், கடந்த 10 நாட்களாக சம்மந்தப்பட்ட இடத்தின் எதிரே தொடர் போராட்டம் நடைபெற்று வருவதாலும்,
3. அப்பகுதியில் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கினை நிலைநாட்டி பராமரித்திடுவதற்காகவும்,
4. இது குறித்த வழக்கு ஒன்று மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மேற்படி அதிராம்பட்டினம் கல்வி செய்யப்பட்டுள்ளதாலும், அறக்கட்டளை நிர்வாகத்தால் தாக்கல்
5. மேற்படி கல்வி அறக்கட்டளையின் கோரிக்கையின் அடிப்படையிலும், மாவட்ட நிர்வாகமானது அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தால் மேற்படி இடத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்திரையினை அகற்றிக் கொள்வதெனவும் மேற்படி இடத்தில் அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகத்தினரால் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையினை அகற்றிக் கொள்வதெனவும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.
6. மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு எண். WA (MD) No.362/2021 நாள் 21.11.2023-ல் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், இரு தரப்பினரும் தற்போதைய நிலையினையே (Status quo) தொடர்ந்து பராமரித்திட வேண்டும். இருதரப்பும் மேற்படி இடத்தில் எவ்விதமான கட்டுமானங்களோ, மாறுதல்களோ செய்யக் கூடாது. இதர நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது.
7. இது தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஏற்படும் தீர்ப்பின் அடிப்படையில், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
8. எனவே மேற்படி இடத்தின் அருகில் நடைபெற்று வரும் போராட்டங்களை உடனடியாக விலக்கிக் கொள்வதெனவும் இதுபோன்று வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது.