Ads: Crescent builders - Coming Soon
கடந்த பத்தாம் தேதி தேதியிட்டு நகராட்சி ஆணையருக்கு அப்பகுதி மக்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "அதிராம்பட்டினம் நகராட்சி புறக்கணிக்கப்படும் வார்டு எண் 9, 10 இல் சரியான சாலை வசதி இல்லை, துப்புரவு பணியாளர்கள் வருவது இல்லை. மழைக் காலங்களில் வீட்டு முன் தண்ணீர் தேங்கி கொசு மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படும் நிலையில் உள்ளது.
ஜனவரி 8ம் தேதி எடுக்கப்பட்ட படம்
எங்கள் வார்டு கவுன்சிலர் என்று ஒருவர் இருப்பதற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை. அப்துல் ஹலீம் என்பவர் எங்கள் வார்டு கவுன்சிலர் என்று அறிந்து, அவரிடம் 2 முறை முறையிட்டோம். சேர்மன் திருமதி எம்.எம்.எஸ்.அ.அப்துல் கரீம் தாஹிரா அம்மாள் அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் இது தொடர்பாக அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இது சம்பந்தமாக நகராட்சி ஆணையர் அவர்கள் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து எங்கள் கோரிக்கையை சரி செய்து தாருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த மனு வழங்கிய பின்னர் கண்துடைப்புக்காக அப்பகுதிக்கு வந்து அதன் பின்னர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனவும் அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.