வானொலி பூங்கா இடத்தினை தங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் தற்போது இடம் நகராட்சிக்கு தேவையாக உள்ளதால் மேற்படி இடத்தினை காலி செய்து ஒப்படைக்க இவ்வலுலக அறிவிப்பின்படி அறிவுறுத்தப்பட்டும் இதுநாள்வரை காலி செய்து ஒப்படைக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே, இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் மேற்படி இடத்தில் உள்ள தங்களுக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்து நகராட்சிவசம் ஒப்படைக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஐப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இந்நகராட்சிக்கு ஏற்படும் சகலவிதமான இழப்புகளுக்கும் தாங்களே முழுப்பொறுப்பாவீர்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் அதிரை நகர ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிராம்பட்டினம் திமுக செயலாளர் திரு ராமகுணசேகரனையும் அதற்கு துணை போகும் நகராட்சி ஆணையரையும் கண்டித்து ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் அதிரை நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்துக்கு வெல்ஃபேர் கட்சி மாநில துணைத் தலைவர் முஹம்மது கவுஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தாம்பரம் கிறிஸ்து கல்லூரியை தொடர்ந்து #அதிரை (வீர சோழன் பட்டினம் மருவிய அதிராம்பட்டினத்தில்) 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த இஸ்லாமிய கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியை முடக்க நினைக்கும் ஆளுங்கட்சி சங்கி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். போராட்டம் வெல்லட்டும்💪" என்று குறிப்பிட்டுள்ளார்.