இதில் ஆண்கள், பெண்கள், குடும்பத்துடன் திரளாக கலந்துகொள்ளுமாறும், பெண்களுக்காக வேன்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதிரை நகர ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் உலமாக்களின் அறிவுரையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது.
எதிர் தரப்பினர் போட்டி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வருவதால் பாதுகாப்பு கருதி முடிவு செய்யப்படுவதாக அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை 8:30 மணியளவில் இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து முஹல்லாவாசிகள், ஜமாத்தார்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளனர்.
முழு வீடியோ லிங்க்: கிளிக்