அதிரை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு வார்டுகளில் முறையாக தூய்மை பணியாளர்கள் வீடுகளில் குப்பை வாங்க வருவதில்லை என நம்மிடம் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தொடர்புகொண்டு புகாரளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அதிரை 2 வது வார்டுக்கு உட்பட்ட சித்திக் பள்ளி எதிர்புறம் உள்ள சந்தில் உள்ள வீடுகளின் வாயிலில் குப்பை மூட்டை, குப்பை வாளிகளை வைத்துள்ளனர். அதேபோல் அதிரை 17 வது வார்டு பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு பகுதியிலும் குப்பை வாங்க வரவில்லை என குற்றம்சாட்டுகிறார்கள்.