அதிரையில் இமாம் ஷாபி பெண்கள் பள்ளி இடத்தை மீட்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதில் பங்கேற்க வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஃபிரெட்டர்நிட்டி இயக்க தலைவர்கள் அதிரை வந்தார்.
"பெரும்பான்மை சமூக நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகையும்., முஸ்லிம், கிறிஸ்த்துவ நிறுவனங்கள் மீது வெறுப்பும், வன்முறையுமா...? இது அண்ணா, பெரியார் வழி வந்த தி.மு.கவா ? அல்லது கோட்சே, சாவர்க்கர் வழியை பின்பற்ற போகும் சனாதன சங்கி கூடமா...?
இமாம் ஷாபி மெட்ரிகுலேஷன் பள்ளி, மெட்ராஸ் கிறிஸ்த்துவ கல்லூரியை பாதுகாக்க அணிதிரள்வோம். அதிரை மக்களின் தொடர் போராட்டத்தில் பங்கேற்க வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு தலைவர் கே.எஸ் அப்துல் ரஹ்மான்
துணை தலைவர் ம.முஹம்மது கவுஸ்
ஃபிரெட்டர்நிட்டி இயக்கம்
அஸ்வத் ஷரீஅத்தி அதிரை விரைகின்றனர்." என்று குறிப்பிட்டு அக்கட்சி அறிக்கையும் வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை இவர்கள் அதிரை போராட்டக் களத்திற்கு வருகை தந்தனர். அப்போது வீரியமான உரையை நிகழ்த்திய வெல்ஃபேர் கட்சி மாநில துணை தலைவர் முஹம்மது கவுஸ், "அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளியை நில விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க முயல்வோம். வாய்ப்பு கிடைக்காவிட்டால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசுவோம். இதற்காக சென்னையில் மாபெரும் போராட்டத்தையும் வெல்பேர் கட்சி நடத்தும்." என்றார்