அதிரை இமாம் ஷாபி பள்ளியின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார் முன்னதாக அதிரை பிறையிடம் பிரத்தியேக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சனையை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். நான் உடனடியாக நகராட்சி நிர்வாக துறை செயலாளரை அழைத்து பேசினேன். இது தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டில் இருப்பதால் அவசரமாக எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்.
அந்த அடிப்படையில் தற்போது பள்ளி திறக்கப்பட்டு இருக்கிறது என்று எண்ணுகிறேன். உச்ச நீதிமன்றத்தின் உடைய வழக்கு முடிவு எப்படி வருகிறதோ அதன்படி தான் அரசாங்கம் செயல்பட முடியும். எனவே உச்ச நீதிமன்ற வழக்கிற்காக காத்திருப்பது தான் தற்போது சரியாக இருக்கும் என தெரிகிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.
முழு வீடியோ -