அதிரை டூ திருச்சி டூ சேலம் டூ திருச்சி.. திமுக குணசேகரன் கும்பலை சுத்தலில் விட்ட அமைச்சர் கே.என்.நேரு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இமாம் ஷாபி பழைய பள்ளி வளாகத்தை எந்தவிதமான சட்ட விதிகளையும் பின்பற்றாமல் நகராட்சி நிர்வாகம் புல்டோசருடன் வந்து ஜப்தி செய்தது அதிரை மக்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனமான இமாம் ஷாபியின் மீது நகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன.

கடந்த வியாழக்கிழமை முதல் இமாம் ஷாபி பழைய பள்ளி வெளியே அதிராம்பட்டின மக்கள் ஷாகின் பாக் பாணியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் பெண்கள் குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளார்கள். 

இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா, எஸ்டிபிஐ கட்சி மாநில நிர்வாகி அபூபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி முன்னாள் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக கலந்து கொண்டு மக்களுக்கும் இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருவதுடன் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், குணசேகரன் தலைமையிலான கவுன்சிலர்கள் திமுக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேருவை திருச்சியில் சந்தித்து உள்ளனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் மட்டுமின்றி அதிரை பாஜக கவுன்சிலர் வடிவேலுவையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவ்வளவு எளிதாக இவர்கள் அமைச்சரை சந்திக்கவில்லை. அதிரையில் இருந்து படை பட்டாளங்களுடன் நேருவை சந்திக்க திருச்சி சென்றவர்களுக்கு ஷாக் காத்திருந்தது. அமைச்சர் சேலம் சென்றுவிட்டார் என்று சொன்னவுடன் அங்கிருந்து வண்டியை சேலத்துக்கு விட்டுள்ளார்கள். ஆனால், சேலத்திலும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை. காரணம் நேரு மீண்டும் திருச்சி திரும்பிவிட்டார். இதை அறிந்து அவர்கள் மீண்டும் திருச்சிக்கு வந்து காக்க வைக்கப்பட்டு பின்னரே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...