அதிரை மக்களே.. திருந்தலாமா? “பேச்சாளர் என்னும் போலிகள்”! வாயை வாடகைக்கு விடும் வாய்சொல் வீரர்களிடம் உஷார்

Editorial
0

Ads: Crescent builders - Coming Soon

நல்லா மேடையில பேசுறான்.. திக்காமல் திணறாமல் அடுக்கு மொழி வசனம் பேசுகிறான்... அவன் பேசுறதை கேட்க நன்றாக உள்ளது போன்ற காரணங்களை சொல்லி சிலரை முன்னிலைப் படுத்துகிறார்கள்.
பேச்சு முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பேச்சுக்காக முன்னிலைப்படுத்தப்படுபவன் நல்லவனா? அவன் பேசும் விசயம் உண்மையா? அவன் பேச்சு நடைமுறைக்கு ஏற்றதா? பேசியதுபோல் முதலில் அவன் நடக்கிறானா? அவனது அரசியல் நிலைபாடு என்னவாக உள்ளது? என்பதையெல்லாம் பார்க்காமல் ரசிக மனப்பான்மையில் மூழ்கிவிடுகிறோம்.
இப்போது பாரதி பாஸ்கர் இப்படி பண்ணிட்டாரே என புலம்புகிறோம். பாரதி பாஸ்கர் போல் பலர் உள்ளார்கள். இஸ்லாமிய சமுதாயத்தில் பல வேலூர் இப்ராஹிம்கள் உள்ளனர். என் ஊரான அதிராம்பட்டினத்திலும் அத்தகையோர் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.
எச்சரிக்கை மக்களே..
பெரும்பாலான பட்டிமன்ற பேச்சாளர்கள் உருவ கேலி செய்வோராகவும், பெண்ணடிமைத் தனத்தை ஊக்குவிப்போராகவும், பண்பாடு கலாச்சாரம் என்ற போர்வையில் சாதியையும் பழமைவாதத்தையும் பரப்புபவர்களாகவுமே உள்ளார்கள். நன்றாக பேசுபவன் எல்லாம் (Intellectual) சிந்தனையாளர் கிடையாது. ஆனால், மக்கள் அப்படி நினைத்துக் கொள்கிறார்கள். வியூகம் வகுப்பவர்கள், பின்னால் இருந்து வேலை செய்பவர்கள், களத்தில் போராடுபவர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு செலிபிரெட்டி மனநிலையில் துரோகம் செய்யும் போலி பேச்சாளர்கள் சிலர் பின்னால் செல்வதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்.
பேச்சாற்றல் அவசியம். ஆனால், அது மக்களை ஈர்க்கும் பிஸ்கட் பாக்கெட்டின் உரை போன்றதுதான். பிஸ்கட் சுவையாகவும், சுத்தமாகவும் இருப்பதுதான் அவசியம். எப்படி பிஸ்கட் பாக்கெட்டின் நிறத்தை மட்டும் பார்த்து நாம் ஏமாற்றப்படுகிறோமோ, அதேபோன்றுதான் இந்த பேச்சாளர்களின் பேச்சாற்றலை மட்டும் பார்த்து ஏமாளிகளாகிவிடுகிறோம். உள்ளே ஒரு சரக்கும் உருப்படியாக இல்லை. இனியாவது வாயை வாடகைக்கு விடும் வியாபாரிகளை நம்பாமல் சிந்தனையாளர்களின் பின்னால் திறள்வோம்.. திருந்துவோம்.
- நூருல் இப்னு ஜஹபர் அலி

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...