அதிரையில் 50 ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வரும் அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை காலி செய்யாவிட்டால் ஜப்தி செய்யப்படும் என நோட்டீஸ் அனுப்பிய நகராட்சி ஆணையரையும் அதற்கு துணைப்போகும் நகராட்சி துணைத் தலைவர் ராம குணசேகரனையும் கண்டித்து நாளை (08-01-2024, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வி.பிரபாகரன் M.L., அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்ற உள்ளதாகவும், இதில் ஆண்கள், பெண்கள், குடும்பத்துடன் திரளாக கலந்துகொள்ளுமாறும், பெண்களுக்காக ஏற்பாடு செய்துள்ள வேன்கள் அனைத்து பள்ளிவாசல்களுக்கு அருகில் இருந்தும் புறப்படும் எனவும் இதை ஏற்பாடு செய்த அதிரை நகர ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
இந்த நிலையில் நாளை நடத்த இருந்த ஆர்ப்பாட்டம் உலமாக்களின் அறிவுரையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.. எதிர் தரப்பினர் போட்டி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வருவதால் பாதுகாப்பு கருதி முடிவு செய்யப்படுவதாக அறிவித்து உள்ளனர்.