அதிரை இமாம் ஷாபிக்கு.. ராகுல் காந்திபோல் உச்சநீதிமன்றத்தில் நீதி கிடைக்கலாம்.. யோகி மாதிரி புல்டோசர் அனுப்புவீங்களா? காங்கிரஸ் நகர தலைவர் தமீம் கொதிப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon

நமது ஊர் அதிராம்பட்டினம் முஸ்லிம்களும் இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வரக்கூடிய ஊராக திகழ்கின்றது. மேலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழக்கூடிய பகுதியும் கூட. இவ்வூருக்கு பல நெடுங்கால வரலாறு உண்டு. உதாரணமாகச் சொன்னால் இவ்வூரில் எங்கள் பாட்டன் வீட்டுக் குடும்பம் 600 வருடங்கள் மேல் பாரம்பரியம் கொண்டது. கி.பி 1700 காலகட்டங்களில் வாழ்ந்த என்னுடைய பாட்டனார் செய்யதுகனி மரைக்காயர் அவர்களுக்கு ஒரு பழமொழி உண்டு என்று என்னுடைய உம்மம்மா அவர்கள் சொல்லி உள்ளார்கள்.


"தஞ்சாவூர் மகாராஜாவுக்கு 88 தோப்பு பாட்டன்வீட்டு செய்(யது)லாக்கனிக்கு 99தோப்பு" (தற்போது ஒரு சில தோப்புகள் தற்போதுல்ல நிலங்களை தவிர மற்ற  அனைத்து சொத்துக்களும் மக்களுக்கே கொடுக்கப்பட்டு விட்டது)  அவர்களின் பெயர் இன்றும் ஜாவியாவின் மூலப்பத்திரத்தில் கானப்படுகிறது. மேலும் பல பழைய மூலப்பத்திரங்களில் காணப்படும் இது அருகில் உள்ள சுற்றுவட்டார கிராமப் பகுதியில் வசித்த மூத்த மக்களிடம் பேச்சுவழக்காகவும் கேட்கலாம். மேலும் தற்காலத்தில் என்னுடைய தாத்தா S.S.யஹ்யா மரைக்காயர் அவர்கள் அதாவது தியாகி S.S. இபுராஹிம் அவர்களுடைய தம்பி அதிரை கரையூர் தெரு ஏரிபுரக்கரை மக்களோடு நெருங்கி பழகியவர்கள். அவர்களின் நினைவாக கரையூர் தெருவில் அவர்களால் நட்டு வளர்த்த புளியமரம் அவர்கள் பெயர்கொண்டே யஹ்யா புலியமரம் என்று அழைக்கப்பட்டது என்பது அப்பகுதி மக்களுக்கு தெரியும்.


மேலும் ஏரிப்புரக்கரையில் உள்ள கிழத்தோட்டம் கடற்கரைக்கு அருகில் உள்ள பெரிய தென்னந்தோப்பை அப்பகுதி மக்களுக்கே கொடுத்து விட்டார்கள் என்பதை அம்மக்களே இன்றும் நினைவு கூர்ந்து வருவதுடன் இன்றும் சகோதரத்துத்துடன் உள்ளனர். அதிரைக்கு என் குடும்பம் செய்த பங்கினை மட்டும்தான் நான் கூறியிருக்கின்றேன். இதே போல் இவ்வூரில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் என்னற்ற குடும்பங்களின் பங்களிப்புகளின் வரலாறுகள் உண்டு என்பதனை இன்று அவர்களின் குடும்பத்தார்களிடமே நீங்கள் கோட்டு தெரிந்துக்கொள்ளலாம்.


தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது ஆரம்ப பள்ளிகள் நம் பகுதிகளிலும் திறக்கப்பட்டன அதற்கு இப்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தால் ஏராளமான நிலங்கள் வழங்கப்பட்டன. இன்றும் அவை ஒவ்வொரு பகுதிகளிலும் இருந்து செயல் பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. மேலும் அதிரையில் அனைத்து மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய நீர் தேக்க தொட்டி கட்ட இடம் கொடுத்தது, EB க்கு நிலம் கொடுத்தது அதிரை மக்கள். இதை தெரியப்படுத்த காரணம் முன்சென்ற காலங்களில் இந்து, முஸ்லிம் என்ற பேதமில்லாமல் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர்தான் நம் ஊர்.


மேலும் இங்குள்ள மக்கள் விட்டுக்கொடுத்துச் செல்பவர்களாகவும், சகிப்புத்தன்மைக்கு பேர் போனவர்களாகவே உள்ளனர். CAA, NRC போராட்டங்களில் பங்களிப்பைச் செய்து ஒற்றுமையாக நின்று தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். அவ்வாறாக இருந்த நமது ஊர் இன்று பட்டியல் போட்டு போஸ்டர் ஒட்டும் நிலைக்குச் சென்றுவிட்டது. தற்போது உள்ள சூழ்நிலை மிகவும் கவலை அடைய வைக்கின்றது. இமாம் ஷாஃபி என்ற கல்வி ஸ்தாபனத்தை முடக்கி விடாமல் தொடர்ந்து செயல்பட நமது ஊர் நகர நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.


ஏன் என்றால் ஒரு கல்வி ஸ்தாபனத்தை உருவாக்குவது என்பது சிறிய காரியம் கிடையாது. அதுவும் இது அறை நூற்றாண்டை கடந்த ஒரு ஸ்தாபனம் என்பது குறிபிடத்தக்கது. இன்றளவும் அதில் பயின்ற என்னற்ற மாணவர்களின் நினைவான ஸ்தாபனமாக அவர்களின் நெஞ்சங்களில் குடியமர்ந்து உள்ளது. அதனை புல்டோசர்கொண்டு அவசர கதியில் இடிப்பதென்பது அம்மக்களின் நெஞ்சங்களை இடிப்பதற்குச் சமம். மேலும் இப்படி இடிக்கப்பட்ட இடத்தில் கட்டப்படும் அறிவுசார் பூங்காவில் படிக்கும் மாணவர்கள், தன் தாய் தந்தை படித்த இடத்தை இடித்த இடத்தில்தான் கட்டப்பட்டுள்ளது. தன் தாய் தந்தையர் படித்த இடத்தை, அவர்களின்  நினைவில் உள்ள இடத்தை இடித்தது தவறான செயல் என்ற வேதனை ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஏற்படும்.


அறிவுசார் பூங்கா அமைக்க இது நெருக்கடியான இடம். அதுவே ECR ரோட்டில் உள்ள இந்த கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் அமையப் பெற்றால் அதிரையை சுற்றியுள்ள கிராம பகுதி மக்களும் பயன்பெறக்கூடியதாக அமையும். போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது சுகாதாரமான சூழலுடன் கூடியதாக அமையும். நீதிமன்ற தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாக வந்துவிட்டது. அதன் நோட்டீசை டிசம்பர் 2 அன்று ஒட்டிவிட்டனர் ஆனால் அதில் இடப்பட்ட தேதி நவம்பர் 30. ஏன் இதில் நகராட்சி அவசரம் காட்ட வேண்டும்? இரண்டு நாட்கள் முன்பாகவே தேதியிட்டு ஏன் நோட்டீஸ் ஒட்ட வேண்டும்?


EP தாக்கல் செய்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி அமீனா மூலமாகவே வருவாய்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆணையர் மூலமாகவே  இதனை அமல்படுத்துவார்கள். இவை நடைமுறைப்படுத்தப்பட வில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. ஒருகால் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி  தற்காலிகமாக உத்தரவை நிறுத்திவைக்க  வேண்டும் என்று வந்தால் என்ன செய்வீர்கள்? உ.பி.யின் யோகி பா.ஜ.க. அரசு புல்டோசர்களைக் கொண்டு இடித்தொழித்த நிகழ்வுகளை கண்டித்த திமுக கொள்கையில் வந்தவர்கள் இப்படி செய்யலாமா?


அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவியை பறித்த குஜராத் சூரத் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் மீண்டும் அவர்களின் மக்களவை உறுப்பினர் பதவி கிடைக்கவில்லையா? நீதிமன்ற உத்தரவுபடிதான் சொல்லிக்கொண்டு இவ்வாறு செய்வது வேதனை அளிக்கின்றது. நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்தான், அதேநேரம் நீதிமன்றம் சென்றதற்கு பதில் அண்ணன் தம்பிகளாக பழகிய நாம் நேருக்கு நேர் முகத்திற்கு முகம்பார்த்து பேசி தீர்த்துக்கொண்டிருக்கலாமே?


இன்றும் அதற்கான வழிகள் மூடப்படவில்லையே, இன்றும் கெட்டுப்போகவில்லை அமர்ந்து பேசலாம். ஒரு அமைதியான, சாந்தப்படுத்தக்கூடிய தீர்வு கிடைக்கும்,  இதற்கு அதிரை நகர காங்கிரஸ் கட்சி சார்பாக என்னன்ன உதவிகள் தேவையோ அதை செய்கிறோம். அதற்கு தேவையான முயற்சிகளை தொடர்ந்து காங்கிரஸ் வழங்கும் என்பதனை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்." என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...