அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு ஜும்மா தொழுதவுடன் மக்கள் தர்ணாவில் பங்கேற்க அழைப்பு

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி இட விவகாரத்தில் நகராட்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி பள்ளி நிர்வாகத்துக்கு அதிரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு நாள். 21.11.2023 தேதியில் வழங்கப்பட்ட தீர்ப்புரையின்படி தடையாணை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வானொலி பூங்கா இடத்தினை தங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலையில் தற்போது இடம் நகராட்சிக்கு தேவையாக உள்ளதால் மேற்படி இடத்தினை காலி செய்து ஒப்படைக்க இவ்வலுலக அறிவிப்பின்படி அறிவுறுத்தப்பட்டும் இதுநாள்வரை காலி செய்து ஒப்படைக்காதது கண்டிக்கத்தக்கதாகும். 

எனவே, இவ்வறிவிப்பு கிடைக்கப்பெற்ற 7 தினங்களுக்குள் மேற்படி இடத்தில் உள்ள தங்களுக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய்து நகராட்சிவசம் ஒப்படைக்கும்படி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஐப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் இதன் மூலம் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக இந்நகராட்சிக்கு ஏற்படும் சகலவிதமான இழப்புகளுக்கும் தாங்களே முழுப்பொறுப்பாவீர்கள் என்பதையும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிரை ஜமாத்தார்கள் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் அறிவித்த நிலையில் எதிர் தரப்பினரும் போட்டி போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வந்ததால் ஊரின் அமைதி கருதி அதை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையிலேயே புல்டோசருடன் வந்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பள்ளி பெயரை கருப்பு பெயிண்டால் அழித்து பலகை வைத்தனர்.

பள்ளி இரும்பு போர்டை புல்டோசரில் நகராட்சி உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளி நிர்வாக அலுவலர் அஷ்ரப் அங்கேயே மயங்கி விழுந்தார்.  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நகராட்சியின் அத்துமீறலை கண்டித்து நேற்று காலையில் இருந்து இரவு வரை பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுதவுடன் இமாம் ஷாபி பழைய பள்ளி அருகில் நடைபெறும் தர்ணாவில் கலந்துகொள்ளுமாறு போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்யப்பட்டு உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...