அதிரை பாடகர் ஜாஃபருக்கு வெளிச்சம் டிவி வழங்கிய "நாகூர் ஹனிபா" விருது
personEditorial
January 03, 2024
0
share
Ads: Crescent builder - Coming Soon:
அதிரையை சேர்ந்தவர் ஜஃபருல்லா. பாடகரான இவர் பல்வேறு பாடல்களை பாடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும், தன்னுடைய யூடியூப் சேனலிலும் பதிவேற்றம் செய்து வருகிறார். அதிரையில் நடைபெறும் திருமணங்களை அழகாக வீடியோ கவரேஜ் செய்து மணமக்களை வாழ்த்தி பாடலை பதிவிட்டு வருகிறார்.
அழகிய குரல் வளமும், பாடல் திறனும் கொண்ட பாடல்கள் மக்களை கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில், இவருக்கு வெளிச்சம் டிவி "நாகூர் ஹனிபா" விருது வழங்கி கவுரவித்து உள்ளது. பட்டுக்கோட்டையில் வெளிச்சம் டிவி மற்றும் தமிழா கலைக்கூடம் இணைந்து நடத்திய விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.