அதிரையில் இன்று காலை குப்பை சேகரிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். ஏன் வாங்குகிறோம், எதற்காக வாங்குகிறோம்? என்று எந்த விளக்கமும் இல்லாமல் கையெழுத்து பெறுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக நகராட்சி தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. நகராட்சி ஆணையாரிடம் இது பற்றி விசாரிக்க அதிரை பிறை சார்பில் செல்போனில் தொடர்புகொண்டோம். ஆனால் அழைப்பை எடுக்கவில்லை.
அதிரையில் மர்மம்.. காரணமே சொல்லாமல் கையெழுத்து வாங்கும் நகராட்சி தூய்மை பணியாளர்கள்
January 19, 2024
0