அதிரை இமாம் ஷாபி பற்றி அமைச்சர் அறிவிப்பு மேம்போக்கானது.. வந்தாரக்குடி குணசேகரன் மீது திமுக நடவடிக்கை எடுக்கனும் - வெல்பேர் கட்சி

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
இது குறித்து வெல்பேர் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான் வெளியிட்ட அறிவிப்பில், "அதிராம்பட்டினத்தில் இமாம் ஷாஃபி பள்ளி செயல்பட்டு வந்த இடத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கிய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளர் ராம குணசேகரனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதும் அனைவரும் அறிந்ததே.

2010 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியாளரால் அளிக்கப்பட்ட இடத்தை தற்போது அதிகாரத்தின் துணைகொண்டு திமுக நகரச் செயலாளர் அபகரிக்க முனைவதை திமுக தலைமை கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. 
தற்போது மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த இடத்தில் மீண்டும் ஷாபி பள்ளி செயல்பட அரசு துணை நிற்கும் என அறிவித்துள்ளார். இது ஒரு மேம்போக்கான அறிவிப்பாகவே தெரிகிறது. 2010ல் அரசால் அளிக்கப்பட்ட இடத்தை உரிய முறைப்படி மீண்டும் ஆவண பதிவு செய்து கொடுப்பதுதான் அதற்கான முதன்மை தீர்வாகும். 

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நகரத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து ராம குணசேகரன் போன்ற பாசிச சிந்தனை கொண்ட நபர்களை நீக்குவது உடனடி தேவையாகும். அதிலும் குறிப்பாக வேறொரு மாவட்டத்தில் இருந்து அதிராம்பட்டினத்தில் வந்தாரக்குடியாக  குடியேறி வசிக்கும் ராமகுணசேகரனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி திமுக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...