Ads: Crescent builders - Coming Soon
சனாதன எதிர்ப்பாளர்களாகவும் சிறுபான்மை காவலர்களாகவும் தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் திமுகவினர் உள்ளுக்குள் இஸ்லாமிய வெறுப்பை சுமந்து கொண்டவர்களாகவே தெரிகிறார்கள் என்பதன் வெளிப்படையான எடுத்துக்காட்டுதான் அதிராம்பட்டினம் குணசேகரனும் அவர் அணியும். மக்கள் நலனுக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அரசு விதிகளுக்கும் விரோதமாக செயல்படும் குணசேகரனை உடனடியாக பொறுப்புகளில் இருந்து நீக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற துணைத் தலைவர் குணசேகரனின் செயல்பாடுகள் அதிராம்பட்டினம் மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையும் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இமாம் ஷாபி பள்ளி மீதான தி.மு.க அரசின் புல்டோசர் பயங்கரவாதத்திற்கு எதிராக அதிரை மக்களின் போராட்டம் வெல்லட்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.