அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி வரும் முஸ்லீம் லீக் குழு.. முதல்வர் ஸ்டாலினிடம் புகாரை கொண்டு செல்ல முடிவு

Editorial
0
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி பிரச்சனை தொடர்பாக விசாரிக்க திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சாவூர் சிறுபான்மை குழு பொறுப்பாளர்கள், கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் இன்று அதிராம்பட்டினம் வருகை தருகிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் முன்னால் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.அபூபக்கர் அவர்களின் அறிவுறுத்தல் பிரகராம் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனம் சீல் வைத்த சம்மந்தமாக ஆய்வு நடத்தி தமிழக முதல்வர் அவர்களுக்கு நேரடியாக சென்று கோரிக்கை வைக்க முஸ்லிம் லீக் முடிவு செய்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் ஒரு தனியார் விருப்பு வெறுப்புக்கு முற்று புள்ளி வைக்கவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சிக்கு கிடைக்கும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் விதமாக யார் தப்பு  செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற முழக்கத்துடன் இன்று காலை 10.30 க்கு அதிராம்பட்டினம் வருகை தர உள்ளனர்.

இதுபோன்று முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இலைய தளபதி நவாஸ் கனி ஆகியோர் அதிராம்பட்டினம் நகரில் நடக்கும் அக்கிரம ஆக்கிரமிப்பை கவனித்து வருகின்றனர். பழம் நலுகி பாலில் விழுவது போன்று  தஞ்சாவூர் கோட்டையை உடைக்க போவது யார்?

- சாகுல் ஹமீது, பத்திரிகையாளர்

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...