இந்த நிலையில் சீல் அகற்றப்பட்டதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிராம்பட்டினம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் (மமக, SDPI, தமுமுக, மஜக, ஐமுமுக, அதிரை தாரூத் தவ்ஹீத்)
இணைந்து அதிரை பேருந்து நிலையத்திலிருந்து வண்டிப்பேட்டை வரை இன்று நன்றி தெரிவிப்பு பேரணி நடத்த திட்டமிட்டனர்.
இது தொடர்பாக அதிராம்பட்டினம் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் மனு அளித்தனர். ஆனால் இரண்டு நாட்கள் முன்பாகவே மனு அளிக்க வேண்டும் எனக் கூறி இன்றைய பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்தது. காவல்துறை அனுமதி வழங்கிய பிறகு இந்த பேரணி நடைபெறும் என அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.