அதிரை மஜக புதிய நிர்வாகிகள் தேர்வு.. இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை ஜப்தி செய்த நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
மனிதநேய ஜனநாயக கட்சி அதிரை நகர ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன் இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தை ஜப்தி செய்த நகராட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மனிதநேய ஜனநாயக கட்சியின் அதிரை நகர ஆலோசனைக் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை ஷேக் மாவட்டத் துணைச் செயலாளர் பைசல் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டனர். நகர ஆலோசனையில் நகர நிர்வாகம் மறு சீரமைக்கப்பட்டு கீழ்காணும் நபர்கள் நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

நகரச் செயலாளர். முகமது பாஷித்
9003336393.
நகர அவைத் தலைவர்.
ஹலீல் ரஹ்மான் .
8838238432.
நகர பொருளாளர். ரிஜ்வான்.
7708016086
நகர துணைச் செயலாளர் .
பஷீர் அகமது.
8220925443
நகரத் துணைச் செயலாளர்.
ராவுத்தர்.
962988091
நகர துணைச் செயலாளர்.
அஜ்மல்.
9790653856
நகரத் துணைச் செயலாளர்
ஹாஜா முகைதீன். 
8667764620.
நகர இளைஞரணி செயலாளர்.
ரியாஸ் கான்.
7339535663
நகர மருத்துவ அணி செயலாளர்.
அசாருதீன்.
6374934355
மேற்கண்ட நபர்கள் நகர நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

ஆலோசனை கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1. இமாம் ஷாபி பள்ளியின் கட்டிடத்தை சட்ட விதிமுறையை மீறி அப்புறப்படுத்த முனைந்து மக்கள் போராட்டத்தை தூண்டி விட்ட நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் :2. இமாம் ஷாபி பள்ளி நிர்வாகத்தை அழைத்து சமரச முடிவு எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்தை கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3. மனிதநேய ஜனநாயக கட்சி அறிவித்துள்ள கோவை சிறைவாசிகள் விடுதலைக்கான தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக திருச்சியில் பிப்ரவரி 10 அன்று சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துள்ளதால் நமது ஊரிலிருந்து சுமார் 15 வேன்களில் செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...