அதிரை பழஞ்செட்டித் தெரு காளிமார்க் சுக்கூர். இவரது மகன் A.S.ஆத்திஃப். அதிரை AFFA கால்பந்து அணி வீரரான இவர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் அதிரைக்கு பெருமை சேர்த்திடும் வகையில் அகில இந்திய அளவில் நடைபெற்று வரும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியான கேலோ இந்தியா கால்பந்து தொடரில் தமிழ்நாடு அணிக்காக விளையாட தேர்வாகினார்.
இந்த நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஃபார்வேர்டு வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் போடாத அதன் நிலையில் பெனாலிட்டி கேக் முறையில் வெற்றியை தீர்மானிக்க நடுவர்கள் முடிவெடுத்தனர். இதில் ஒரு கோல் வித்யாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.