ராமேஸ்வரம் - செகந்திராபாத் ரயில் அதிராம்பட்டினம் வழியாக சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு கடந்த 2022ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒரு நாள் இயக்கப்படும் இந்த ரயில் நிா்வாகக் காரணங்களால் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலானது (07695) ஜனவரி 31 ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, ராமநாதபுரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயிலானது (07696) வரும் 26, பிப். 2 ஆம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.