அதிரையில் 15 கவுன்சிலர்களை இத்தனை கோடிக்கு வாங்கலாம்.. மக்களை கெட்ட வார்த்தையால் திட்டி டீல் பேசிய திமுக பிரமுகர்

Editorial
0
Ads: Crescent builders - Coming Soon
அதிரையில் திமுகவின் நீண்ட நாள் உறுப்பினராகவும் அல் அமீன் பள்ளிவாசல் தலைவராகவும் இருப்பவர் அன்சாரி. இமாம் ஷாபி பழைய பள்ளி இட விவகாரத்தில் இவர் நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன் தரப்புக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி வருகிறார். குறிப்பாக பள்ளி நிர்வாகம் மீதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீதும் தொடர்ந்து காட்டமான விமர்சனங்களையும் இவர் வாட்ஸ் அப் குழுமங்களில் முன்வைத்து வருகிறார்.

தொடர்ந்து நகராட்சிக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வரும் இவர் நேற்றைய தினம் அதிரையை சேர்ந்த ஒரு வாட்ஸ் அப் குழுமத்தில் இமாம் ஷாபி பழைய பள்ளிக்கு ஆதரவாக ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களையும் ஒட்டுமொத்த அதிரை மக்களையும், இஸ்லாமிய மக்களையும் தரக்குறைவான காதால் கேட்க முடியாத சொற்களால் திட்டி இருக்கிறார்.

இந்த ஆடியோ மற்ற வாட்ஸ் அப் குழுமங்களிலும் பகிரப்பட்டு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இன்றி அதிராம்பட்டினத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் 15 பேரை ஒன்றரை கோடி ரூபாய் இருந்தால் விலைக்கு வாங்கலாம் என பதிவிட்டும் உள்ளார். அதிராம்பட்டினத்தில் அதிமுக, எஸ்டிபிஐ, மமக, முஸ்லிம் லீக், பாஜக ஆகிய கட்சிகளுக்கு கவுன்சிலர்கள் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவில் உள்ளனர்.
இதை தவிர்த்து மற்ற அனைவரும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களே அப்படி இருக்கையில் திமுக அல்லாத கவுன்சிலர்களின் எண்ணிக்கை 10 கூட தாண்டாத சூழலில் 15 கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முடியும் என திமுகவை சேர்ந்த அன்சாரி சொல்லி இருப்பது திமுக கவுன்சிலர்களும் விலை போவார்கள் என்ற அர்த்தத்திலேயே வருகிறது. 

திமுக கவுன்சிலர்களே விலை போவார்கள் என பேசிய திமுக உறுப்பினர் அன்சாரி மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? இஸ்லாமிய மக்களையும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் உட்பட அனைவரையும் ஒட்டுமொத்தமாக தரக்குறைவாகவும் இழிவாகவும் கொச்சையான கேவலமான சொற்களை கொண்டு பேசி ஆடியோ வெளியிட்ட அன்சாரி அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுமா? 

கொச்சையான வார்த்தைகளை கொண்டு ஊர் மக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியவர் பள்ளிவாசலின் நிர்வாகத்தில் தலைவராக தொடர முடியுமா என மக்கள் கொந்தளிக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
செய்திகள், விளம்பரங்களுக்கு.. வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள்
உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும்.. ...
மெசேஜ் அனுப்ப கிளிக் செய்யுங்கள்...