இதற்கு மதர்ஷா நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து உள்ளது. இந்த நிலையில் இன்று இதனை கைப்பற்ற நகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று மதர்ஷா உலமாக்கள், நிர்வாகியை அழைத்து நாளை (சனி) மதர்ஷாவை விடுமுறை அறிவிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. இன்று காலை நகராட்சி அதிகாரிகள் நிலத்தை கைப்பற்ற உள்ளதாக நாம் நேற்று செய்தி வெளியிட்டோம்.
இதனால் ஆத்திரமடைந்த அதிரை திமுக கவுன்சிலர் மைதீன் அதிரை ஊடகங்கள் மீது அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் வாட்ஸ் அப்பில் பேசினார். அதில் நேற்று மதர்ஷாவை நடத்த 30 நாட்கள் உலமாக்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று நகராட்சி அதிகாரிகளும் நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பான பலகை வைப்பதற்காக அங்கு வந்தனர்.
அந்த பலகையில் இடம்பெற்ற வாசகத்தை பார்க்கையில் உலமாக்களிடம் போலியான உத்திரவாதத்தை நகராட்சி கொடுத்தா அல்லது கவுன்சிலர் மைதீன் தவறான தகவலை தெரிவித்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம், "இவ்விடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நீதிமன்றம் மற்றும் காவல்துறை நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என்பதை அறியவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 30 நாட்கள் மதர்சா நடைபெற அவகாசம் அளித்துள்ளோம் என்று கூறியவர்கள் இப்படிப்பட்ட வாசகத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இவர்கள் சொல்வதை கேட்டு மதர்சாவுக்கு செல்லும் உலமாக்கள், மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்பதற்கு என்ன நிச்சயம்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் அங்கு திரண்டு பதாகையை வைக்க அனுமதி தராமல் எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்ப்பு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த விசாரணை நீதிமன்றத்தை நாடி Execution petition வழங்கி நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர், முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே அதை கையகப்படுத்தப்பட வேண்டும் என சட்டம் இருப்பதால் இவ்வாறு செய்ய முடியாது என தெரிவித்த பிறகு பதாகை நகராட்சி அதிகாரிகள் வைக்காமல் திரும்பி சென்றனர்.