இதற்கு நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை இதனை கைப்பற்ற நகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று மதர்ஷா உலமாக்கள், நிர்வாகியை அழைத்து இன்று பாட சாலைக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.
தீர்ப்பு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்த விசாரணை நீதிமன்றத்தை நாடி Execution petition வழங்கி நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்னர், முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகே அதை கையகப்படுத்தப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஆனால், இதை பின்பற்றாமல் இன்று காலை நகராட்சி அதிகாரிகள் நிலத்தை கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தீர்ப்பு வழங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், பெண்கள் மதர்சா நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சமயத்தில் உடனுக்குடன் இதை காலி செய்ய வேண்டிய தேவை என்ன? இதனால் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாதா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இமாம் ஷாபி பழைய பள்ளி இடத்தில் இன்று காலை திரண்டனர். நகராட்சி அதிகாரிகளும் நிலத்தை கையகப்படுத்தியது தொடர்பான பலகை வைப்பதற்காக அங்கு வந்தனர். அப்போது சட்டப்படி இவ்வாறு செய்ய முடியாது சட்ட விபரங்களை தெரிவித்த பிறகு பதாகை நகராட்சி அதிகாரிகள் வைக்காமல் திரும்பி சென்றனர்.