இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் சிக்கி உள்ளனர். மேலும் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல மாவட்டங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு வேனில் அரிசி, பிரட், ஜாம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகிகள் பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் வழங்கினார்கள்.